Wednesday, 10 December 2014

பால் கொழுக்கட்டை - சமையல்!


 Paccarici flour with salt, hot pudding and mashed scroll to the terms.

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது.


எப்படிச் செய்வது?


பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவி, முதல் இரண்டு பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டாம்  தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு  வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின் பறிமாறவும்.

Wednesday, 5 November 2014

முந்திரிக் கொத்து - சமையல்!

Moong dal, sesame, coconut varuttu for three separate terms to change color.



என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 1 கிலோ,
தேங்காய் - 2 (துருவியது),
எள் - சிறிது,
பச்சரிசி - 1/2 கிலோ,
ஏலக்காய் தூள் - சிறிது,
கருப்பட்டி அல்லது வெல்லம் - 1/2 கிலோ,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
 


எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பு, எள், தேங்காய் துருவல் மூன்றையும் தனித் தனியாக நிறம் மாறும் பதத்துக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.  கருப்பட்டி அல்லது  வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கையில் ஒட்டும் பதத்துக்கு கெட்டியாகப் பாகு காய்ச்ச வேண்டும். வறுத்த பாசிப் பருப்பை மிதமாக  அரைத்து, அதில் ஏலக்காய் தூள், எள், தேங்காய் துருவலைக் கொட்டி, பாகை ஊற்றிக் கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்  கொள்ள வேண்டும். பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து, லேசாக மஞ்சள் தூள் கலந்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இந்த  மாவில் நனைத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். 


Wednesday, 15 October 2014

பால் பாயசம்! - சமையல்!









 Cotton-wool in milk and add a little water and cook cooker 3 whistles.


என்னென்ன தேவை? 

பால் - 1 லிட்டர்,
பச்சரிசி நொய் - 1/4 கப்,
சர்க்கரை - 300 கிராம்,
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை,
முந்திரி, திராட்சை - அலங்கரிக்க,
குங்குமப்பூ - சிறிது,
நெய் - சிறிது.



எப்படிச் செய்வது?  

பாலில் சிறிது தண்ணீர் விட்டு நொய் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பாலில் வெந்த நொய்யில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து  அடிப்பிடிக்காமல் கிளறவும். நெய்யில் ஏலக்காய், முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். குங்குமப்பூ வேண்டுமென்றால் கையால்  நொறுக்கிச் சேர்க்கவும். சுலபமான, சுவையான பால் பாயசம் ரெடி.


Tuesday, 9 September 2014

டாப் 20 சமையல் குறிப்புகள்!


  1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
  2. முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
  3. அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.
  4. மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.
  5. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.
  6. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
  7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.
  8. பச்சை மிளகாய் வாடாமல் இருக்க அதன் காம்பை கிள்ளிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள் வரும்.
  9. ஃப்ரிட்ஜ் இல்லாதவங்க கீரைகளை ஈரத்துணியில் லேசாக சுற்றி வைக்கலாம்.பச்சை மிளகாயையும் ப்ரெஷ்-ஆ மாதிரி வைக்கலாம்.
  10. தேங்காய் துண்டுகளை ஒரு பிளஸ்டிக் டப்பாவில் தண்ணீர் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரும்.
  11. காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.
  12. உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
  13. பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.
  14. தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.
  15. தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
  16. சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.
  17. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
  18. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
  19. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
  20. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

Wednesday, 20 August 2014

ஓட்ஸ் பழ கூழ்!








ஓட்ஸ் பழ கூழ்


தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 4
ஆப்பிள் - 3
கோதுமை ரவை - 1/2 கப்
ஓட்ஸ் - 2 கப்
பால் - 1 1/2 லிட்டர்
வெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

• வாழைப்பழம், ஆப்பிளை துண்டகளாக வெட்டிக் கொள்ளவும்.

• முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைக்க வேண்டும்.

• பின்னர் அதில் கோதுமை ரவையை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

• அடுத்து அதில் ஓட்ஸ் போட்டு 3 நிமிடம் வறுக்க வேண்டும்.

• பின் அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

• பிறகு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

• இறுதியில் விசிலானது போனதும், அதனை திறந்து அதில் தேன், பட்டை தூள் சேர்த்து கிளறி, குளிர வைத்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் பழ கூழ் ரெடி!!!

Wednesday, 16 July 2014

கேரட்- பீட்ரூட் சூப்!

 கேரட்-  பீட்ரூட் சூப்


தேவையானவை:

பீட்ரூட்  –2
கேரட்  – 2
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
வெண்ணெய் - தாளிக்க

செய்முறை:

• கேரட், பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

• வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

• காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.

• இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டவும்.

• அதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


Wednesday, 14 May 2014

ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ!

 ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ


தேவையான பொருட்கள்:

க்ரீன் டீ பேக் - 2
தண்ணீர் - 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
தேன் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 1/2 கப்
இஞ்சி சாறு - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டி - 6 

செய்முறை:

• முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் க்ரீன் பேக்குகளை டீயின் நிறம் வரும் வரை ஊற வைத்து, குளிர வைக்க வேண்டும்.

• பின்னர் அதில் ஆரஞ்சு ஜூஸ், தேன், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

• பின்பு அதனை டம்ளரில் ஊற்றி, அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சூப்பரான ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ!!! 

Search This Blog