Tuesday, 6 January 2015

திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!


 Groundnut oil fry the dough. After pouring the boiling milk than




என்னென்ன தேவை?

கடலை மாவு  - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப், நெய் - 1 கப்.
 


எப்படிச் செய்வது?  

கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக்  கிண்டினால் திரிபாகம் ரெடி.
 

Monday, 5 January 2015

மைதா-ரவை கொழுக்கட்டை - சமையல்!



 In the spirit of keeping a clean cloth maitamavai role in the tumor idli take away the speed, aravitavum.

 


என்னென்ன தேவை?

மைதா மாவு - 1 லு கப் (ஆவியில்  வேக வைத்தது),
ரவை - லு கப் (நெய்யில் வறுத்தது),
சர்க்கரை - 1 கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி,
திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் 1/2 கப்,
ஏலக்காய் தூள்- சிறிது,
நெய் - தேவைக்கேற்ப.
 

எப்படிச் செய்வது?  

மைதாமாவை ஒரு சுத்தமான துணியில் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுத்து, ஆறவிடவும். பின் 2 லு கப் தண்ணீரை  கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, 2 டீஸ்பூன் நெய் விடவும். கொதிக்கும் தண்ணீரில் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறி  வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். இத்துடன் ரவையையும் தேங்காயையும் நன்கு சிவக்க  வறுத்து, சர்க்கரை சேர்த்து வதக்கி சுருள எடுத்து வைத்துக் கொள்ளவும். இது பூரணம். கையில் நெய் தொட்டுக் கொண்டு மேல் மாவில் இருந்து  (மைதா கலவையில்) ஒரு எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை பிடித்து பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில்  வேக வைத்து எடுக்கவும்.


Sunday, 4 January 2015

முள்ளங்கி தயிர் பச்சடி!


முள்ளங்கி தயிர் பச்சடி


தேவையானவை:

முள்ளங்கி - 3
தயிர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது),
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


 

• முதலில் முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

• தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

• ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு).

• பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் .

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.

• இந்த முள்ளங்கி தயில் பச்சடி சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும். மேலும் உடல் குளிர்ச்சிக்கு இந்த பச்சடி சிறந்தது. 


Saturday, 3 January 2015

கம்பு அடை!

கம்பு அடை


தேவையானப் பொருள்கள்:
கம்பு மாவு-ஒரு கப்
சின்ன வெங்காயம்-7
பச்சை மிளகாய்-1
பெருஞ்சீரகப் பொடி-சிறிது
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
கறிவேப்பிலை-ஒரு கொத்து
உப்பு-தேவைக்கு
நல்லெண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:


* வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.

* பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.

* கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.

* கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.

* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.

* இதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும். 

Thursday, 1 January 2015

வேர்க்கடலை சாலட்!



 வேர்க்கடலை சாலட்




தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 1 கப்
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
மாங்காய் - 1
ப.மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை -  சிறிதளவு

செய்முறை :

• வேர்க்கடலையை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை ஒரே அளவில் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை போட்டு கலக்க வேண்டும்.

• கடைசியாக எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

Search This Blog